நானும் காதலித்தேன்: முதல் காதல் பற்றி பேசிய ரஜினிகாந்த்...
மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது முதல் காதல் அனுபவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றனர். அதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடந்த இந்த நட்சத்திர விழாவில் நடிகர்களுக்கு இடையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் மற்றும் சூர்யவின் சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த கால்பந்து போட்டியில், ஆர்யா மற்றும் அதர்வாவின் அணிகள் மோதின.
இதையடுத்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது முதல் காதல் அனுபவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார். ஆம், பள்ளி படிக்கும் போது இளம் வயதில், நானும் ஒருத்தியை காதலித்தேன். அனைவரது வாழ்விலும் முதல் காதல் வரும். ஆனால், அதனை யாராலும் மறக்க முடியாது. ஆனால், என்னால் என்னுடைய காதலியின் இதயத்தை வெல்ல முடியவில்லை என்றார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த காதலியின் பெயரை கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினியிடம் குறைந்த ஆசை எது? மிகப்பெரிய ஆசை எது என்று கேட்கப்பட்டது.
குறைந்த ஆசை எது என்றால், சின்னதா ஒரு ஸ்கூட்டர் வாங்கனும், சின்னதா அபார்ட்மெண்ட், ஒழுக்கமான நடுத்தர வாழ்க்கை என்றார். மேலும், மிகப்பெரிய ஆசையாக, நல்ல செயல்களை மக்களுக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய படத்தின் மூலம், அவர்களுக்கு நல்ல தகவல்களை தர வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment